Total Pageviews

Thursday, December 6, 2012

கல்வியா செல்வமா வீரமா


கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா வீரமா

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும்
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
கல்வியா செல்வமா வீரமா

ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
கல்வியா செல்வமா வீரமா

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
கல்வியா செல்வமா வீரமா

படம் : சரஸ்வதி சபதம்
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்

No comments:

Post a Comment