Total Pageviews

Thursday, October 25, 2012

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே



குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்துவம்புகள் பண்ணாதே

சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே


போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
சலசலக்கையிலே
என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதே

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே


செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
சம்மதப்பட்டுக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி
தாலியைக் கட்டிக்கனும்

(குங்குமப் பூவே)


படம்: மரகதம்
இசை: சுப்பையா நாயுடு
பாடியவர்: சந்திரபாபு, ஜமுனா ராணி

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே




பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே 
தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே

கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை 
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

(பம்பரக் கண்ணாலே)

கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிக்கிறேன்
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

படம்: மணமகன் தேவை
இசை: ஜி. ராமநாதன்
முதலில் பாடியவர்: சந்திரபாபு


பாடல்: கே.டி. சந்தானம்

Wednesday, October 24, 2012

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா




பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் 
ஒரு அம்மாண்டி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் 
ஒரு அம்மாண்டி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாண்டி ராணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்

சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை




பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்

விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: PB ஸ்ரீநிவாஸ், TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

Thursday, October 4, 2012

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே-Pudupennin manasai thottu poravare





புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே


புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
பாடியர்கள் : MS ராஜேஸ்வரி
வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு

வள்ளியே சக்கர வள்ளியே-Valliye sakkara valliye


வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி வா ரதி நீ
ரூனாலினி நீ என் சொப்பராணி

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

உன்னை பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
சீலைட் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி
என்றே ஆனதென்ன

முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
உன்ன நான் உப்பு கண்டமா
தொட்டுக்க உப்பு குடுமா
உன்னால டம்மா துண்டம்மா உடைஞ்சேன்

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

சோழன் புத்திரி சுற்றும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளை தான் காதல் உள்ளம் வெள்ளை தான்
நாளும் வெந்து சாய

கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்தைதாம்மா
கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்தைதாம்மா

வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
உன்னைத்தான்

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி மா ரதி நீ
மெர்னாலினி யு மை சொப்பராணி

படம் : எங்கேயும் காதல் (2011) 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : ரிச்சர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவ்