Total Pageviews

Thursday, October 4, 2012

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே-Pudupennin manasai thottu poravare





புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே


புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
பாடியர்கள் : MS ராஜேஸ்வரி
வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு

No comments:

Post a Comment