Total Pageviews

Thursday, October 25, 2012

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே




பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே 
தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே

கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை 
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

(பம்பரக் கண்ணாலே)

கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிக்கிறேன்
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

படம்: மணமகன் தேவை
இசை: ஜி. ராமநாதன்
முதலில் பாடியவர்: சந்திரபாபு


பாடல்: கே.டி. சந்தானம்

No comments:

Post a Comment