Total Pageviews

Saturday, October 30, 2010

Payumoli nee enakku parkkum vizhi naan unakku-பாயுமொளி நீயெனக்கு - பார்க்கும் விழி நீ எனக்கு;

பாயுமொளி நீயெனக்கு - பார்க்கும் விழி நீ எனக்கு;
      தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு;
 வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
      தூயசுடர் வானொலியே! சூறையமுதே! கண்ணம்மா!(
வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
      பூணும் வட நீயெனக்கு, புது வயிர நானுனக்கு;
காணுமிடந  தோறு நின்றன் கணணி னொளி வீசுதடி:       மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே கண்ணம்மா,,,
வானமழை நீயெனக்கு,வண்ணமயில் நானுனக்கு;
      பானமடி நீயெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
      ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!
வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு;
      பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
                                                                                     நின் சுவைக்கே
     கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!
காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு;
     வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந தீஞ்சுவையே!
     நாதவடி வானவனே! நல்லயுயிரே! கண்ணம்மா!  
Note: there are three more saranams, but not included in the song.  You can enjoyed the beutiful music by S.P.Balasubramaniam   and the apt video

No comments:

Post a Comment